பதிவு செய்த நாள்
20
மார்
2020
03:03
வாழப்பாடி: தான்தோன்றீஸ்வரர் கோவிலில், புது கொடிமரம் அமைக்க பூஜை நடந்தது. வாழப்பாடி அருகே, பேளூர் வசிஷ்டநதிக்கரையிலுள்ள, தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாகத்திலிருந்த, பழமையான கொடிமரம் பட்டுபோன நிலையில் விழுந்ததால் அகற்றப்பட்டன. பின், கேரளா, பத்த?னம்திட்டாவிலிருந்து, கொடிமரம் செய்ய, வேங்கை மரம் கொண்டு வரப்பட்டது. அந்த மரத்துக்கு, நேற்று காலை, சிறப்பு பூஜை நடந்தது. செயல் அலுவலர் ராஜாராம், ஊர் பெரியதனக்காரர்கள், கொடிமர உபயதாரர்கள், மக்கள் தரிசனம் செய்தனர். இதுகுறித்து, ஸ்தபதி, கோரிமேடு மணிகண்டன் கூறியதாவது: கொடிமரத்துக்கு, கேரளாவிலிருந்து, 31 அடி உயர வேங்கை மரம் கொண்டு வரப்பட்டுள்ளது. சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன், 15 நாளில், கொடி மரத்தை நேர்த்தியாக செய்யவுள்ளோம். அடுத்தகட்டமாக செப்பு தகடு வேயப்பட்டு, இரு மாதத்தில், பிரதிஷ்டை செய்ய தயாராகும். இவ்வாறு அவர் கூறினார்.