பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா ஒத்தி வைக்கப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டது.கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.நேற்று முன்தினம் மாலை முதல், பேரூர், பூண்டி, மருதமலை கோவில்களில், பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. வரும், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருந்த, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவும் ஒத்திவைக்கப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டது.