பதிவு செய்த நாள்
21
மார்
2020
02:03
புதுச்சேரி: கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப் பதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுகின்ற இடங்களில் வைரஸ் தொற்று எளிதாக மற்றவர்களுக்கு பரவி விடும் என்பதால், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்களை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் கைகளை சுத்தமாக கழுவுவதற்கு வசதி செய்து தர வேண்டும்; தண்ணீர், சோப், ேஹண்ட் வாஷ் போன்றவற்றை வைக்க வேண்டும் என, கலெக்டர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக் கும் பொருட்டும், பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாகவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதியும், கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, இந்து சமய அறநிலையத் துறை நேற்று அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் அறிவுறுத்தலை தொடர்ந்து, பெரும்பாலான கோவில்கள் நேற்று மாலை மூடப்பட்டன. மேலும், பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி, வரும் 31ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகையும் அனைத்து கோவில்களின் வாசலில் வைக்கப்பட்டுள்ளது.அதேசமயம், ஆகமவிதிகளின்படி சுவாமிக்கு நித்யபடி பூஜைகள் வழக்கம்போல நடைபெறும் என்றும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. பிரதோஷ வழிபாடுஇன்று கிடையாது. கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். சனி மகா பிரதோஷம் இன்று வருகிறது. இருந்தபோதும், கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதால், சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு இன்று கிடையாது; நித்தியபடி பூஜைகள் மட்டும் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.