பதிவு செய்த நாள்
21
மார்
2020
04:03
கிருஷ்ணகிரி: கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க, ஹிந்து கோவில்களில் நேரம் குறைத்து, கிறிஸ்தவ ஆலயங்கள் பூட்டப்பட்டன.
கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும், 31 வரை பெரிய கோவில்கள் மற்றும் தேவாலயங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில், தரிசனத்திற்கு காலை, 7:00 முதல், 10:30 மணி வரையும், மாலை, 5:00 முதல், 7:00 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்கு, ஒருவர் பின் ஒருவராக இடைவெளி விட்டு வர வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர். இதே போல், கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் பூட்டப்பட்டு திருப்பலிகள், சிலுவைப்பாதைகள், ஜெபவழிபாடுகள் அனைத்தும் வரும், 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சிட்கோ வளாகத்தில் உள்ள, நகராட்சி சிறுவர் பூங்காவும் மூடப்பட்டது. 100 பேருக்கு மேல் ஒன்று சேரக்கூடாது என்று அரசு அறிவித்திருந்தாலும், சில இடங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர், 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கூட்டம் நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.