நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயம், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயம், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளை மூட மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை முதல் வரும், 31 வரை வேளாங்கண்ணியில் உள்ள தேவாலயங்கள் மூடப்படுவதாக தேவாலய நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து பழைய மாதா தேவாலயம், கடற்கரை எதிரில் உள்ள தேவாலயம், விண்மின் தேவாயலம், நடுத்திட்டு தேவாலயம், தியான மண்டபம் என அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டன. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகைக்கான தவக்காலம் நடைபெற்று வருவதால், தவக்கால விரதமிருந்து ஆரோக்கிய மாதாவை தரிசிக்க வந்த பக்தர்கள் தேவாலய வாசலில் இருந்து வழிபட்டு சென்றனர்.