தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் இன்றி நடந்த பிரதோஷம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2020 06:03
தஞ்சாவூர், கொரோனா எதிரொலியாக தஞ்சை பெரியகோவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும், சனி பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது.
கொரோனா எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதை போல, இந்திய தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ள தஞ்சை பெரியகோவில் கடந்த 18 ம் தேதி மூடப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து ஆகம விதிப்படி நான்கு கால பூஜைக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் இல்லாததால் நிலையிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும், பக்தர்கள் இல்லாததால் கோவில் வெறிச்சோடி காட்சியளித்தது.