பதிவு செய்த நாள்
22
மார்
2020
02:03
புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், மஹா சாந்தி ஹோமம் நேற்று நடந்தது.புதுச்சேரி- திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடீ கோவிலில், வலம்புரி மகா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, நுாதன ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் அருள் பாலிக்கின்றனர்.உலக நன்மை வேண்டியும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், நேற்று காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மஹா சாந்தி ஹோமம் நடந்தது.இதில், யஜமான ஸங்கல்பம், கும்ப ஆவாஹனம், ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் இருந்து எடுக்கப்பட்ட முக்கியமான மந்திரங்கள் மற்றும் ஸ்ரீவைகானஸ பகவத் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட மந்திரங்களை கொண்டு, 7 திரவியங்களால், 7 பட்டாச்சாரியர்களை கொண்டு ஹோமம் நடத்தப்பட்டது.இந்த ஹோமத்தை, பாப்பாக்குடி உ.வே.வெங்கடேச பட்டாச்சாரியார் தலைமையில், கோவில் தல பட்டாச்சாரியார் ஸ்ரீதர், பட்டர்கள் கண்ணன், ஜானகிராமன் உள்ளிட்டோர் மற்றும் சாஸ்திர பட்டாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். மஹா பூர்ணாஹூதி, வேதவிண்ணப்பம், சாற்றுமுறை செய்யப்பட்டது.ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிராஸ்ட் தலைவர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், பழனியப்பன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.