பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் 31 வரை பக்தர்கள் அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2020 04:03
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் வரும் 31 ம் தேதி வரை பொதுமக்கள் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளதாக பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் தெரிவித்துள்ளனர்.
திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடீ கோவிலில், வலம்புரி மகா கணபதி, பட்டாபிேஷக ராமச்சந்திரமூர்த்தி, நுாதன ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமி மற்றும் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் அருள்பாலிக்கின்றனர்.உலகில் வேகமாக பரவி வரம் கொரோனா வைரசால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சவடீ கோவிலில் வரும் 31ம் தேதி வரை தரிசனத்திற்கு பொதுமக்கள்தற்காலிகமாக அனுமதிக்கப்படமாட்டார்கள். இத்தகவலை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன், டாக்டர் பழனியப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.