நாகப்பட்டினம்: நாகை அடுத்த எட்டுக்குடி சுப்ரமணிய சுவாமி கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாகை அடுத்த எட்டுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலமான சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. பரிகார ஸ்தலமான இக்கோவிலில், சித்திரை திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. முருகப்பெருமான் தேவியர்களுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.