கிருமாம்பாக்கம்:பிள்ளையார்குப்பம் அருள்சக்தி அன்னை கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் அருள்சக்தி அன்னை கோவில் மகா கும்பாபிஷேக விழா, கடந்த 2ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, தீபாராதனை, கடம் புறப்பாடு செய்து, 8 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம், 8.30 மணிக்கு அருள்சக்தி அன்னை ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சந்தான கிருஷ்ணன், கார்த்திக்கேயன் சிவாச்சாரியார் செய்திருந்தனர்.