ராமநாதபுரம்:உத்திரகோசமங்கை அருகே எக்ககுடி வாழவந்தாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்.,3ல் கணபதி ஹோமத்துடன் யாகசாலைக்கான சிறப்பு பூஜை துவங்கியது. நேற்று காலை கடம் புறப்பாடுக்கு பின்னர், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர் சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.