பதிவு செய்த நாள்
28
மார்
2020
05:03
ஓசூர்: ஓசூர் அருகே, மத்திகிரி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஒத்திவைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, மத்திகிரி, மிடுகரப்பள்ளி, குருபட்டி, நவதி உட்பட எட்டு கிராம மக்கள் சார்பில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா, உற்சவம், பல்லக்கு உற்சவம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் ஏப்., 8 முதல், 10 வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசின் வழிகாட்டுதலின் படி, தேர்த்திருவிழாவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழா கமிட்டி தலைவர் வாசுதேவன் தலைமையில் நடந்த கூட்டத்தில், மீண்டும் திருவிழா நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பஞ்., தலைவர் ரவிக்குமார், ஞானப்பா, ருத்ரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.