திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 28 தொடங்கி ஏப்., 11 வரை நடக்க இருந்த பங்குனி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் இத்திருவிழா முக்கியமானது. இவ்விழாவில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கும். மறுநாள் தேரோட்டம் நடக்கும்.இந்த ஆண்டு பங்குனி திருவிழா மார்ச் 28 ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்., 11வரை நடத்த முடிவாகி பத்திரிகைகள் விநியோகிக்கப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் தற்போது பங்குனி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.