நாயகம் புத்தாடை அணிந்தால், ‘‘இறைவா! இதை நீயே எனக்கு கொடுத்தாய்! இதன் நன்மையான அம்சத்தை மட்டுமே வழங்க வேண்டுகிறேன். இதன் தீமையானவற்றில் இருந்து என்னைக் காப்பாயாக!’’ என சொல்வார். ஆடையானாலும் சரி வேறு எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அதை நன்மைக்கும் பயன்படுத்தலாம். தீமைக்கும் பயன்படுத்தலாம். இறை நம்பிக்கையாளன் எந்த பொருளை பெற்றாலும் அதை இறைவன் அளித்த வெகுமதியாகக் கருதுவதோடு, அதன் நன்மையைப் பெறவும் பிரார்த்திப்பான்.