Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமாயணத்தை மேற்கோள்காட்டி பிரதமர் ... வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடிய திருச்செந்தூர் கடற்கரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை தேவஸ்தானம் 5 மருந்துகள் தயாரிப்பு
எழுத்தின் அளவு:
திருமலை தேவஸ்தானம் 5 மருந்துகள் தயாரிப்பு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
10:04

திருப்பதி : கொரோனா தொற்றிலிருந்து ஊழியர்களை காப்பாற்ற, ஐந்து விதமான ஆயுர்வேத மருந்துகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்துள்ளது.

நாடு முழுவதும், கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம், புதிதாக, ஐந்து விதமான ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து வருகிறது.தேவஸ்தானத்திற்கு சொந்தமான, எஸ்.வி. ஆயுர்வேத கல்லுாரி, எஸ்.வி. ஆயுர்வேத மருத்துவமனை, எஸ்.வி. ஆயுர்வேத மருந்தகம் உள்ளிட்டவற்றின் உதவியுடன், ஐந்து விதமான மருந்துகளை, தேவஸ்தானம் தயார் செய்துள்ளது.உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, திருப்பதி செயல் இணை அதிகாரி பசந்த்குமார், அந்த மருந்துகளை, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

நேற்று காலை, ஆயுர்வேத மருத்துவ குழுவினர், திருப்பதியில் உள்ள சீனிவாசம் ஓய்வு விடுதிக்கு சென்று, அங்கு தங்கியுள்ள, உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும், 200 ஊழியர்களுக்கு, இந்த மருந்துகள் அடங்கிய கிட்டை அளித்தனர்.அதில், நேசல் டிராப்ஸ், கை கழுவும் லிக்விட், சானிடைசர், வாய் கொப்பளிக்கும் லிக்விட், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாத்திரைகள் என, ஐந்து பொருட்கள் அடங்கியுள்ளன. தற்போது, அன்னதான கூட ஊழியர்கள், 1,000 பேருக்கு மட்டுமே இந்த மருந்துகள் வழங்கப்பட உள்ளன.

தொடர்ந்து, தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வதந்தி பரப்புவோர் மீதுசட்டப்படி நடவடிக்கைதிருமலையில் இருந்து, 8 கி.மீ.,யில் உள்ள தர்மகிரி வேதபாடசாலையில் தங்கி, வேதம் பயின்று வரும் ஒரு மாணவர், சில நாட்களாக இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு வந்தார்.அவரை, திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து, ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சோதனை முடிவுகள் வருவதற்குள், மாணவருக்கு கொரோனா இருப்பதாக, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. இதனால், வேதபாடசாலையில் பயிலும், 470 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர். இது, தேவஸ்தான அதிகாரிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தவறான வதந்திகளை பரப்புவோர் மீது, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீராம நவமியை ... மேலும்
 
temple news
அயோத்தி; தெய்வீக மற்றும் அற்புதமான ராமர் கோவிலில் ராம் லல்லா பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இது முதல் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் சாமியார்புதூர் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோயிலில் ராம நவமி விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar