நாமக்கல்: நாமக்கல், கிறிஸ்து அரசர் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில், புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசுவை சிலுவையில் அறையப்பட்ட தினத்தை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கின்றனர். அதை முன்னிட்டு, நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நேற்று புனித வெள்ளி நிகழ்ச்சி கிறிஸ்து அரசர் ஆலயத்தின் பங்குதந்தை ஜான் அல்போன்ஸ் நடத்தினார். அதில், திருச்சிலுவை ஆராதனை நடத்தினார். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், யாரும் பங்கேற்கவில்லை. அதனால், கிறிஸ்து அரசர் ஆலயத்தில் வழக்கமாக பெரிய வெள்ளியன்று காலையில் நடைபெறும் சிலுவைப்பாதம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.