Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரம்: முயற்சியில் வெற்றி மீனம்: பதவி தேடி வரும் மீனம்: பதவி தேடி வரும்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கும்பம்: பணப்புழக்கம் கூடும்
எழுத்தின் அளவு:
கும்பம்: பணப்புழக்கம் கூடும்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2020
03:04

குணத்தில் குன்றாக திகழும் கும்ப ராசி அன்பர்களே!
சூரியன் சாதகமான இடத்துக்கு வருவதால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறக்கும். உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் மே 3ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். 11ம் இடத்தில் இணைந்திருக்கும் சனி,கேது நற்பலன் அளிப்பர். புதன் மே 4க்கு பிறகு சாதகமாக நின்று சுபபலன் தருவார். பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக காணப்படுவதால் பணிகளைக் கச்சிதமாக முடிப்பீர்கள். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும். பொன், பொருள் சேரும். பெண்கள் உறுதுணையாக  இருப்பர்.


சுக்கிரனால் மதிப்பு மரியாதை உயரும். உறவினர்களிடம் இணக்கம் உண்டாகும். புதனால் ஏற்பட்ட அவப்பெயர்,செல்வாக்கு பாதிப்பு, வீண் கவலை முதலியன ஏப்.18க்கு பிறகு மறையும். மே 4க்கு பிறகு கணவன், மனைவி இடையே  இணக்கமான சூழல் உருவாகும்.
பெண்கள் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினர் சதி உங்களிடம் எடுபடாது. புதிய பதவி தேடி வரும். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காண்பர். மே 4க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். தோழிகள் உதவிகரமாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். வியாபாரம் செய்யும் பெண்கள் சீரான வளர்ச்சி காண்பர்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் சனி பலத்தால் வளர்ச்சி காண்பர். மே 3க்கு பிறகு வெளியூர் பயணம் மூலம் ஆதாயத்துடன் திரும்புவர்.
* வியாபாரிகளில் சிலர்  தங்கள் வணிகத்தை வெளிமாநிலம், வெளிநாடு வரை விரிவுப்படுத்த வாய்ப்புண்டு.
* தனியார் துறை பணியாளர்களுக்கு மே 4க்கு பிறகு புதன் சாதகமான நிலையில் இருப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.   
* ஐ.டி., துறையினர் மே 4க்கு பிறகு வேலையில் திருப்தி காண்பர். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
* மருத்துவர்களின் திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
* வக்கீல்கள் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
* ஆசிரியர்களுக்கு வேலைப்பளு குறையும். கோரிக்கை நிறைவேறும்.
* போலீஸ், ராணுவத்தினர் அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் காண்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். புதிய பதவி கிடைக்கும். தொண்டர் மத்தியில் செல்வாக்கு உயரும்.
* கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று வளர்ச்சியடைவர். புகழ் பாராட்டு கிடைக்கும்.
* விவசாயிகள் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். புதிய சொத்து  வாங்கலாம். வழக்கு, விவகாரம் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
* மாணவர்கள் மே 4க்கு பிறகு நல்ல மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஏப்.18 முதல் மே 4 வரை அரசிடம்  சலுகை கிடைப்பது அரிது.
* அரசு பணியாளர்கள் ஏப்.18 வரை வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
*  விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பின் மூலம் சுமாரான ஆதாயமே கிடைக்கும்.

நல்ல நாள்: ஏப்.14,18,19,23,24,30, மே 1,2,3,8,9,10,11,12
கவன நாள்: மே 4,5 சந்திராஷ்டமம்  
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு எண்: 1,6

பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்தீபம்
* சனிக்கிழமைகளில் நவக்கிரக வழிபாடு
* வெள்ளிக்கிழமை காளிக்கு மாவிளக்கு .

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar