பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
03:04
பெருந்தன்மையுடன் செயல்படும் மகர ராசி அன்பர்களே!
சுக்கிரன் மே 3 வரை நன்மை தருவார். புதன் ஏப்.18 ல் இருந்து மே 4 வரை ஆதாயம் தருவார். ராகுவால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதனால் ஏப்.18க்கு பிறகு பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் சிறக்கும். சமூகத்தில் மதிப்பு கூடும் கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
பெண்கள் உற்சாகத்துடன் செயல்படுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீ்ரகள். வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானம் காண்பர். ஏப்.18க்கு பிறகு குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். மே 4க்கு பிறகு வேலையில் இடமாற்றம் ஏற்படும். முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். உடல்நலம் சுமாராக இருக்கும்.
சிறப்பான பலன்கள்* தொழிலதிபர்கள் சாதுர்யமாக செயல்பட்டு வெற்றி காண்பர். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும்.
* வியாபாரிகளுக்கு பகைவர் தொல்லை, அரசு வகையில் பிரச்னை முதலியன ஏப். 18க்கு பிறகு மறையும்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஏப்.18 முதல் மே 4க்குள் பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.
* ஐ.டி., துறையினருக்கு சக ஊழியர்கள்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் மே 4 க்குள் சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெறுவர்.
* கலைஞர்களுக்கு சக கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பாராட்டு, புகழ் தானாக வரும்.
* விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர். பசுவளர்ப்பில் போதிய வருமானம் கிடைக்கும்.
* மாணவர்கள் ஏப்.18க்கு பிறகு ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை காண்பர். போட்டிகளில் வெற்றி காணலாம்.
சுமாரான பலன்கள்* தொழிலதிபர்கள் சிலர் அவப்பெயரைச் சந்திக்கலாம். தொழில் ரீதியாக திடீர் பயணம் செல்ல வாய்ப்புண்டு.
* வியாபாரிகளுக்கு பெண்கள் வகையில் தொல்லை வரலாம்.
* அரசு பணியாளர்கள் பணிச்சுமை, வீண்அலைச்சலுக்கு ஆளாவர். மே 3க்கு பிறகு வேலையில் அக்கறையுடன் இருக்கவும்.
* தனியார் துறை பணியாளர்கள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். மே 4க்கு பிறகு வேலை விஷயமாக குடும்பத்தை பிரிய நேரிடலாம்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
* மருத்துவர்களுக்கு வீண் அலைச்சல், வெளியூர் செல்லும் சூழல் உருவாகும்.
* ஆசிரியர்கள் மே 4க்கு பிறகு திடீர் இடமாற்றத்திற்கு ஆளாவர்.
* போலீஸ், ராணுவ துறையினருக்கு பொறுமையும், நிதானமும் தேவை. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* அரசியல்வாதிகள் விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே விரும்பிய பதவி கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு மே3க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
நல்ல நாள்: ஏப்.15,16,17,20,21,22,27,28,29,30, மே 6,7,8,9,13
கவன நாள்: மே 2,3 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை எண்: 6,8
பரிகாரம்:* சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம்
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* சுவாதியன்று லட்சுமிநரசிம்மர் வழிபாடு