கடலுார்: கரையேறவிட்டகுப்பத்தில் அப்பர் கரையேறிய வரலாற்று பெருவிழா ரத்து செய்யப்பட்டது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதன்மையானவரான அப்பர் சைவ சமயத்தின் சிறப்புகளை பாடி வந்தார். அதனை விரும்பாத சமண மன்னன் மகேந்திரவர்ம பல்லவன் உத்தரவுபடி, அப்பர் கல்லில் கட்டி கடலில் வீசப்பட்டார். அப்போது, கல்லை தெப்பமாகக் கொண்டு கடலுார் வண்டிப்பாளையத்தில் கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள பெரியநாயகி சமேத பாட லீஸ்வரரை வழிபட்டார். இந்த வரலாற்று பெருவிழா ஆண்டுதோறும் பழைய வண்டிப்பாளையம் கரையேறவிட்டகுப்பத்தில் அப்பர் கரையேறிய குளக்கரையில் நடத்தப்பட்டு வந்தது. நேற்று நடக்க இருந்த அப்பர் கரையேறிய திருவிழா, ஊரடங்கு உத்தரவால் ரத்து செய்யப்பட்டது. கரையேறவிட்ட குப்பத்தில் உள்ள அப்பர் சன்னதியில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.