திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாயில்லா ஜீவன்களுக்கும் உணவு வழங்கிவருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஊருக்குள் நடமாடும் வாயில்லா ஜீவன்களும் பிச்சைக்காரர்களும் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் சிலர் உணவு வழங்கி வருகின்றனர். அரசும் அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்நிலையில் தெருக்களில் சுற்றி திரிந்து வரும் நாய்கள் மாடுகள் பசுக்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவில்லாமல் திண்டாடின. இதை கண்ட தேவஸ்தானம் திருப்பதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருக்களில் திரிந்து வந்த நாய்கள் பசுக்கள் எருதுகள் உள்ளிட்டவற்றுக்கு உணவளித்து வருகிறது.அதேபோல் தெருக்களில் வாழ்ந்து வரும் ஆதரவற்றவர்களுக்கும் தேவஸ்தானம் தினசரி 70 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது.