பதிவு செய்த நாள்
13
ஏப்
2020
11:04
அவிநாசி: அவிநாசி பேரூராட்சி சார்பில், நவீன தொழில்நுட்ப உதவியுடன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வார்டுகள், வீதிகள் தோறும், கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதற்கு, அவிநாசியில் உள்ள உணவக உரிமையாளர் பூபதி, தனது விவசாய பயன்பாட்டுக்குரிய டிராக்டரை வழங்கியுள்ளார். 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த டிராக்டர் டேங்கரில், கிருமிநாசினி நிரப்பப்பட்டு, தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த டிராக்டரில், எச்டிபி., ஸ்ப்ரேயர் பம்ப் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில், 300 அடி நீளத்துக்கு, முறையே இருவர் வீதம், கிருமி நாசினி தெளிக்க முடியும். நேற்று, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் பணி துவங்கியது. கோவில் அர்ச்சகர், வாகனத்துக்கு பூஜை செய்த பின், பணி துவங்கியது. அவிநாசி காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.