தமிழ் புத்தாண்டு: பக்தர்களின்றி கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2020 10:04
தமிழ் புத்தாண்டையொட்டி உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சுவாமி நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
தமிழக அரசின் தடை உத்தரவை பின்பற்றி கோவில்கள் அடைக்கப்பட்டு, பூஜைகள் பக்தர்களின்றி நடத்தப்படுகிறது. இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருப்பூர், கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் சுவாமி நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தமிழ் புத்தாண்டு நாளில் எப்படியாவது இறைவனை வழிபட வேண்டும் என அடைக்கப்பட்ட கோவில் வாசலில், சில பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.