மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியனும், அவனது மனைவி காஞ்சன மாலையும் குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். யாகத் தீயில் பார்வதி குழந்தையாக அவதரித்தாள். தடாதகை என பெயரிட்டான். அவளை இளவரசியாக்கி போர் பயிற்சி அளித்தான். அவள் எண்திசைக் காவலர்களையும் வென்றாள். இறுதியாக, சிவலோகமான கைலாயத்தின் மீது போர் தொடுத்தாள்.
அங்கிருந்த சிவனின் அழகு கண்டு நாணம் கொண்டாள். உன் மணாளன் இவரே என்று வானில் அசரீரி ஒலித்தது. அதன்படி சிவன் தலைமையில் பிரம்மா, திருமால், நந்தீஸ்வரர், தேவர்கள் அனைவரும் மதுரையில் ஒன்று கூட திருமணம் நிகழ்ந்தது. அவர்கள் இன்று வரை மதுரையில் நல்லாட்சி புரிந்து வருகின்றனர். மீன் போல் துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் மீனாட்சி என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது. மே4 ல் மீனாட்சி திருக்கல்யாணத்தை இது நம்ம வீட்டு கல்யாணம் என பக்தர்கள் வீட்டிலேயே வழிபட இருக்கின்றனர்.