சித்ரா பவுர்ணமியன்று கையில் ஏடும், எழுத்தாணியுமாக அவதரித்தவர் சித்ரகுப்தர். உயிர்களின் பாவபுண்ணிய கணக்கை நிர்வகிக்கும் கணக்கராக இருப்பவர் இவரே. கேதுவின் அதிதேவதையாக விளங்குபவர் சித்ரகுப்தர். இவரை வழிபட்டால் கேது தோஷம் நீங்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவர்.
காஞ்சிபுரத்தில் இவருக்கு தனிக் கோயில் உள்ளது. சித்ராபவுர்ணமியன்று விரதமிருந்து இவரை வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழும் பாக்கியம் உண்டாகும். இந்த ஆண்டு மே7 சித்ராபவுர்ணமியன்று சித்ரகுப்த ஜெயந்தி நடக்கிறது.