காளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை விழா; தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2025 12:10
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழானை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னிதியை சுற்றியுள்ள பகுதியில் பக்தர்கள் கார்த்திகை தீபங்களை ஏற்றி, தீப ஒளியில் சிவ நாமத்தை சொல்லி வழிபட்டனர். மேலும், அறிவையும் ஞானத்தையும் அளிக்கும் வாயு லிங்கேஸ்வரரான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தனர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது; கார்த்திகை மாசம் சிவகேசவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம் என்றும், இந்த மாதத்தில் கார்த்திகை மாத தீபங்கள் ஏற்றினால், நீண்ட ஆயுளுடன் அனைத்து ஆசிகளும், நல்ல ஆரோக்கியமும் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். ஆண்டு முழுவதும் தீபங்களை ஏற்ற முடியாத பக்தர்கள் கார்த்திகை மாதத்தின் போது ஒரே நேரத்தில் 365 திரி தீபங்களை ஏற்றினால் ஒரு வருடம் சிவகேசவருக்கு கார்த்திகை மாத தீபங்களை ஏற்றியதைப் போன்ற பலன் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீ காளஹஸ்தியை சேர்ந்த நடனக் கலைஞர்கள் , சந்திரகிரியை சேர்ந்தவர்களின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சிகள் பக்தர்களை மிகவும் கவர்ந்தது. இதில் கோயில் செயல் அலுவலர் பாபிரெட்டி மற்றும் அவரது மனைவி, துணை செயல் அலுவலர் என்.ஆர். கிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது மனைவி, கோயில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.