விழுப்புரம்: கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வையொட்டி, விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி பகுதியில் பெண்கள் வித்தியாசமான முறையில் சடங்கு செய்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக, மாவட்ட நிர்வாகம் அரசு துறைகள் மட்டுமின்றி காவல் துறையினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனி பகுதியில், பெண்கள் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், கொரோனா நோய் பரவல் பிரச்னையில் இருந்து மக்கள் விடுபட்டு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டி விழிப்புணர்வு விளம்பரத்தை தீட்டினர். இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் வேப்பிலையை வைத்து கொண்டு, அதை மஞ்சள் நீரில் நினைத்து கோ... கோ... கொரோனா என கோஷம் எழுப்பி நுாதன முறையில் சடங்கு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.