சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கோவில் உண்டியலை உடைத்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடிந்து கோவிலை பூட்டிச் சென்றனர். நேற்று காலை சுடுகாடு அருகே கோவில் உண்டியல் கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சங்கராபுரம் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தியதில், கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்துச் சென்று சுடுகாட்டில் வைத்து உடைத்து அதிலிருந்த காணிக்கையை திருடிக் கொண்டு உண்டியலை போட்டுச் சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து உண்டியலை உடைத்து காணிக்கை திருடிய நபரை தேடி வருகின்றனர்.