பதிவு செய்த நாள்
17
ஏப்
2020
01:04
மதுரை: கொரோனா ஊரடங்கால், மதுரை சித்திரை திருவிழாவை எப்படி நடத்துவது என, அறநிலையத் துறை ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இன்று மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்க இருந்தது. கொரோனா ஊரடங்கால் விழாவை ரத்து செய்து அறநிலைய துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி மே.2ல் நடக்கவிருந்த மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே.3 ல் நடக்கவிருந்த திக்விஜயம் மே.4 ல் நடக்கவிருந்த மீனாட்சி, சொக்கநாதர் திருக்கல்யாணம், மே. 5 ல் திருத்தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் ரத்தானது.
இந்த விழா ரத்தானதால் மே. 7 ல் அழகர் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருருளலும் ரத்தாகிறது. எனினும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மீனாட்சிக்கு, சுந்தேரஸ்வரர் திருமாங்கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாண விழாவை சம்பிரதாயபடி எளிமையாக நடத்த அறநிலையத்துறையிடம் கோயில் நிர்வாகம் அனுமதி கோரியுள்ளது.முதன்முறையாக இப்பெரும் விழாக்கள் கொரோனா தொற்றால் ரத்தானது பக்தர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.