பாதையில் சென்ற ஒரு மனிதரைப் பார்த்த தோழர்கள், ‘‘ இந்த மனிதர் தன் ஆற்றலை சீரிய வழியில் ஈடுபடுத்தினால் சமுதாயத்திற்கு எவ்வளவு நலம் மிக்கதாக இருக்கும்?’’ என தங்களின் மனநிலையை தெரிவித்தனர். ‘‘ஒரு மனிதர் தன் பச்சிளங்குழந்தையின் தேவைக்காக செல்கிறார் என்றால் அது சீரிய வழி. வயது முதிர்ந்த பெற்றோரின் பணிவிடைக்காக சென்றார் என்றால் அதுவும் நல்லதே. நல்ல குறிக்கோளுக்காகவும், தீய வழியில் இருந்து தன்னை பாதுகாக்கவும் செல்கிறார் என்றால் அதுவும் இறைவழியே. ஆனால் ஆடம்பரம், பெருமை, புகழுக்காக அவர் செல்வதாக இருந்தால் அது சைத்தானின் வழியாகும்’’ என்றார் நாயகம்.