‘‘கரிந்து போன முகத்தையுடைய பெண்ணும், நானும் மறுமை நாளில் இந்த விரல்களைப் போல இருப்போம்’’ என்று தன் நடுவிரல், சுட்டுவிரலைச் சுட்டிக் காட்டினார் நாயகம். ‘கரி்ந்து போன முகத்தையுடைய பெண்’ என்பது கணவரை இழந்த பெண்ணைக் குறிக்கும். கணவனை இழந்த பெண்களுக்கு சிறுகுழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கலாம். அந்நிலையில் ஒரு பெண் குழந்தை வளர்ப்புக்காக மணம் முடிக்காமல் வாழ்பவள் மிக உயர்ந்தவள் ஆவாள். கற்பு, மானத்துடன் அவள் காலம் கழிப்பாள். இத்தகைய பெண்ணுக்கு மறுமை நாளில் நாயகத்துடன் சேர்ந்திருக்கும் பேறு அமையம். குழந்தைகளுக்காக மணம் புரியாமல் தியாக தீபங்களாக வாழும் பெண்கள் மறுமையில் நன்மை அடைவர்.