காதுகளில் வட்டக் கம்மல் அணிந்த கோலத்தில் முருகப்பெருமான் மயிலாடுதுறை அருகிலுள்ள பொன்னுார் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் அருள்புரிகிறார். தவத்தில் ஆழ்ந்த சிவபெருமானின் மீது மலர்க்கணை தொடுத்தான் மன்மதன். வெகுண்ட சிவன், நெற்றிக்கண்ணால் எரித்தார். கணவரை இழந்த ரதிதேவி அழுது முறையிட்டாள். மனமிரங்கிய சிவன், ‘‘தேவர்களைக் காப்பாற்றும் நல்ல நோக்கத்துடன் என் தியானத்தைக் கலைத்ததால், உன் கணவர் விரைவில் உயிருடன் திரும்புவார்’’ என வாக்களித்தார். அதன்படி மன்மதனுக்கு உயிர் கொடுத்த சிவன் ‘ஆபேத்சகாயேஸ்வரர்’ என்னும் பெயரில் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். அக்னியின் வடிமாக இருப்பதால் ‘அக்னிபுரீஸ்வரர்’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார். முன்னோர் ஆத்ம சாந்திக்காக பக்தர்கள் இவரை வழிபடுகின்றனர். பங்குனி மாதம் ஐந்து நாள் சுவாமி மீது சூரியக்கதிர்கள் விழுகிறது. வருணன், அரிச்சந்திரன் வழிபட்டு பலன் பெற்றுள்ளனர். கு எலுமிச்சை மரம் தல மரமாக உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தின்று அம்மனுக்கு வளையல் கட்டினால் பிரச்னை தீரும். அருகருகே இரண்டு தட்சிணாமூர்த்தி சன்னதிகள் இங்குள்ளது. கல்வி, பேச்சில் வெற்றி பெற இவர்களை வழிபடுகின்றனர். வள்ளி, தெய்வானையுடன் முருகன் தனி சன்னதியில் உள்ளார். காதுகளில் வட்ட வடிவமான காதணியை அணிந்த இவரை தரிசிப்போருக்கு தங்க ஆபரணங்கள் வாங்கும் யோகம் உருவாகும். பிரகாரத்தில் உள்ள சனீஸ்வரர் சுபகிரகமாகத் திகழ்கிறார். . சனிதோஷம் போக்குபவரான இவருக்கு எள்தீபம் ஏற்றுகின்றனர். . செல்வது எப்படி மயிலாடுதுறையில் இருந்து 8 கி.மீ., விசேஷ நாட்கள் கார்த்திகை மாதத்தில் ரதி சிவனை வழிபட்ட வைபவம், நேரம்: காலை 7:00 – 10:00 மணி, மாலை 5:30 – 7:00 மணி, காலை 7:00 – 10:00 மணி, மாலை 5:30 – 7:00 மணி தொடர்புக்கு: 04364 – 250 758, 250 755 அருகிலுள்ள தலம்: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்