காராமணி சுண்டல்: என்ன தேவை: சிகப்பு காராமணி – 200 கிராம் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 ஸ்பூன் கொத்துமல்லி – 1 ஸ்பூன் கெட்டியான புளிக்கரைசல் – 1 ஸ்பூன் வெல்லம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 ஸ்பூன் பச்சை மிளகாய் – 5 துருவிய தேங்காய் – 2 ஸ்பூன்
எப்படி செய்வது: காராமணியை 12 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து குக்கரில் 15 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீரை வடித்து விடவும். பச்சை மிளகாய், தேங்காய்த் துருவலையும் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி பொன்னிறமானதும் காராமணி, புளிக்கரைசல், உப்பு, துருவிய வெல்லம், அரைத்த கலவை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி கொத்தமல்லி துாவவும்.