பதிவு செய்த நாள்
25
ஏப்
2020
12:04
வேலூர்: வேலூரில், கெங்கையம்மன் திருவிழா ரத்து செய்யப்படுவதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவால், அனைத்து தனியார் பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பங்குனி தொடங்கி வைகாசி மாதம் வரை நடக்கும் பங்குனி உத்திர பெருவிழா, அக்னி வசந்த விழா, தீமிதி விழா, வேலூர் சித்ரா பவுர்ணமி பூ பல்லக்கு விழா, குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா, வேலங்காடு பொற்கொடியம்மன் ஏரித்திருவிழா, சத்துவாச்சாரி கெங்கையம்மன் திருவிழா என, அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.