கரூர்: கரூர் பண்டரிநாதன் திருக்கோவிலில் நடந்த சித்ரா பௌர்ணமி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர். கரூர் பாண்டுரங்க ராஜவிட்டல் நாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி விழா நடந்து வருகிறது. கடந்த 5ம் தேதி காலை 6.30 மணிக்கு பண்டரிநாதன், ஸ்ரீ ரகுமாயி அம்மாளுக்கும், ஸ்ரீ சங்கு சக்கர விநாயகருக்கும், ஸ்ரீ ஆஞ்ச நேயருக்கும், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு ஸ்ரீ ரகுமாயி சமேத பண்டரிநாதன் ஸ்வாமி புஷ்ப அலங்காரத்தில் முக்கிய திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை உறியடி விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.