மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: மே13ல் தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2012 11:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வரும் 13 ம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு திருவிழா வரும் 13 ம் தேதி இரவு 9.15 மணிக்கு கம்பம் நடுதலுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனைகள் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. 18 ம் தேதி பூச்செரிதல், 20 ம் தேதி காப்பு கட்டுதல், 28 ம் தேதி திருத்தேர், 30 ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. குறிப்பாக வரும் 27, 28, 29, 30 ம் தேதி ஆகிய நாட்களில் மாவிளக்கு மற்றும் பால்குடம் ஊர்வலம் நடக்கிறது. நேற்று 7 ம் தேதி பஞ்சபிரகார விழா நடந்தது. இன்று 8 ம் தேதி புஷ்ப பல்லக்கு, 9 ம் தேதி ஊஞ்சல், 10 ம் தேதி அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் வெகுசிறப்பாக நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் செய்து வருகிறார்.