ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்னும் ஐந்தாம் வீடு பலமாக இருப்பதை இப்படி சொல்கிறார்கள். முற்பிறவியில் ஒருவர் செய்த நற்செயல்களின் பலன் புண்ணியமாகி இந்த பிறவியில் நன்மையை வாரி வழங்கும். ‘உள்ளது போகாது; இல்லாதது நுாதனமாக வராது’ என்றும் சொல்வதுண்டு.