புதுச்சேரி ஸ்ரீதேவி ஏழை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2025 11:08
புதுச்சேரி; புதுச்சேரி, பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீதேவி ஏழை மாரியம்மன் கோவிலில் ஆடி மகோற்சவத்தை யொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஸ்ரீ தேவி ஏழை மாரியம்மன் கோவிலில் ஆடி மகோற்சவ விழா கடந்த 28 ம் தேதி, காப்பு கட்டுதல், ஆடிப்பூரத்தோடு துவங்கியது. தொடர்ந்து, தினந்தோறும் சுவாமி நாராயணி அலங்காரம், துர்க்கை அம்மன், மகாராணி முத்தங்கி, மாரியம்மன், ஆண்டாள் அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து திருத்தேர் புறப்பாடு, சாகை வார்த்தல் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு மாரியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், நேற்று சுவாமி தனலட்சுமி அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.