கோபம் வரும்போது அடக்கிக் கொள்பவனே வலிமை வாய்ந்தவன். கோபம் கொள்பவனை இறைவன் விரும்ப மாட்டான்.
கோபம் ஷைத்தானின் வெளிப்பாடு. ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கிறான். நீரால் மட்டுமே நெருப்பை அணைக்க முடியும். எனவே கோபம் வந்தால் ஒளு செய்ய வேண்டும். (நீரால் சுத்தம் செய்தல்) நிற்கும் பொழுது கோபம் வந்தால், அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். அப்படியும் குறையாவிட்டால் படுத்துக் கொள்ளட்டும் என்கிறார் நாயகம். கோபக்காரர் ஒருவர், ஏதாவது அறிவுரை கூறுங்கள் என்ற போது “கோபம் கொள்ளாதீர்” என்றார் நாயகம். அவர் மீண்டும் அறிவுரை கூறுங்கள்! என கேட்டுக் கொண்டே இருந்தார். பொறுமையாக ஒவ்வொரு முறையும் கோபம் கொள்ளாதீர் என்றே பதிலளித்தார்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:36 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:24 மணி.