பதிவு செய்த நாள்
02
மே
2020
03:05
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், எமதர்மர் வேடமிட்டு கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. ஊரடங்கு உள்ள நிலையில், பல்வேறு துறைகள் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று, பொதுநல அமைப்பினர், நகராட்சி நிர்வாகம், போலீசார் சார்பில், முகக்கவசம் மற்றும் தலைக் கவசம் அணியாமல் வாகனங்களில் வருவோரை, எமதர்மர் வேடமணிந்த நபர், பாசக்கயிறு போட்டு பிடிப்பது போலவும், தூய்மைப் பணியாளர் எமதர்மருக்கு கிருமிநாசினி தெளித்தும், டாக்டர் வேடமிட்டவர் முகக் கவசம் அணிவித்தும், போலீசார் பாதுகாப்பாக பிடித்துக் கொண்டும் மக்களை காப்பாற்றுவதாக நடித்து காண்பிக்கப்பட்டது. பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, பஸ் ஸ்டாண்ட் வளாகம், சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் உள்ளிட்ட பல இடங்களில், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, இன்ஸ்பெக்டர் தேவி, பொதுநல ஆர்வலர் பாண்டியன், தி.மு.க., மாவட்ட துணை செயலர் சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.