ஒடிசா புரி ஜெகந்நாதர் தேரோட்டம் நடக்குமா?: தேர்கள் புதுப்பிக்கும் பணி துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2020 12:05
புரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம் இந்தாண்டு ஊரடங்கு அமலில் உள்ளதால், நடக்குமா ? என கேள்வி எழுந்துள்ள நிலையில் மூன்று தேர்கள் புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது.
ஒரிசாவின் கடற்கரை நகரான புரியில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் ஆண்டு உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான புகழ்பெற்ற தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் நடைபெறும். இந்தாண்டு ஜூன் 23-ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரானா தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் மே. 17 வரை ஊரடங்கு அமலில் உளளது. எனவே இந்தாண்டு தோரோட்டத்தை நடத்து தொடர்பாக ஏற்கனவே முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமரிடம் தொலை பேசியில் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தேரோட்டத்தை நடத்துவதற்காக கோயில் நிர்வாக கமிட்டி எடுத்துள்ள முடிவின் படி முதல் கட்டமாக இன்று பூஜை, நிகழ்ச்சிகளுடன் மூன்று தேர்களையும் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.