பதிவு செய்த நாள்
06
மே
2020
02:05
சென்னை : அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கோவில்களில், கொரோனா தொற்று தடுப்புக்கான, சானிடைசர் மற்றும் வளாக கிருமிநாசினி வாங்க, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறிய கோவில்களுக்கு, மாவட்டம் வாரியாக, 5 முதல், 8 லட்சம் ரூபாய்.இணை கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள, அறநிலையத்துறை மண்டலங்களுக்கு, 30 லட்சம் ரூபாயை, கொரோனா சிறப்பு நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிதியில், கோவில் அர்ச்சகர், பூசாரி, ஊழியர்களுக்கு தேவையான, முக கவசம், கைகளை துடைக்கும் சானிடைசர், கோவிலின் உள்ளேயும், வளாகத்திலும் தெளிக்கும் கிருமிநாசினி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கிய நிதியில், தமிழகத்தில் உள்ள சிறிய கோவில்களுக்கு, கொரோனா தடுப்பு பணிக்காக, தலா, 2,000 ரூபாய் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தேவையான அளவு முக கவசம், கிருமி நாசினி, சானிடைசர் போன்றவை வாங்கப்பட்டு விநியோகிக்கப்படும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.