பரமக்குடியில் சித்திரை தேரோட்டம் இன்றி கலை இழந்த கோயில்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2020 02:05
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில்களில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டதால், நேற்று தேரோடும் வீதிகள் கலை இழந்து காணப்பட்டன.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வீட்டில் இருந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கோயில் விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பரமக்குடி மீனாட்சி அம்மன், ஈஸ்வரன் கோயில் என சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று சித்திரை தேரோட்டம் நடக்கும் நாள் ஆகும். அப்போது ஹரஹர, சிவசிவ கோஷம் விண்ணை பிளந்திருக்கும். ஆனால் விழா ரத்தால் தேரோடும் அனைத்தும் வீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பக்தர்கள் சோர்வடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பக்தர்கள் அவரவர் வீட்டில் விளக்கேற்றி வைத்து சுவாமி தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.