பதிவு செய்த நாள்
06
மே
2020
02:05
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஊரடங்கு காரணமாக கோயில் திருவிழாக்கள் தடைபட்டதால் புரவி பொம்மை செய்யும் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.
தெற்கு வேளார் தெரு சேதுராமலிங்கம் கூறியது: சிங்கம்புணரியில் 250க்கும் மேற்பட்டோர் பரம்பரையாக புரவி, மண்பாண்டங்கள் செய்து வருகிறோம். கோயில் விழாவிற்கு தேவையான புரவிகள், அக்னிசட்டி, மாடு, அக்னிசட்டி, மயில், போன்ற மண் பொம்மைகள் செய்து வருகிறோம்.தற்போது ஊரடங்கால் அனைத்து கோயில் திருவிழாக்களும் தடைபட்டுஉள்ளது. விழா காலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோயில் விழாவிற்கு முன்பதிவு செய்த அனைத்து ஆர்டர்களும் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. ஆர்டர் செய்து தயார் நிலையிலுள்ள பொம்மைகளும் திருவிழா தடையால் விற்பனை செய்யப் படாமல் உள்ளது. மேலும் மண்பானை, தீச்சட்டி முளைப்பாரி, மீன் குழம்பு சட்டி, பணியார சட்டி, உள்ளிட்ட பலவகை மண்பாண்டங்கள் தயாரித்து வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்பப் படும். ஊரடங்கால் புரவி பொம்மை, பானை தயாரிக்கும் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகிறோம், அரசு எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.