கோயில் பணிகளுக்கு அனுமதி; பக்தர்கள் வழிபாட்டிற்கு ‛நோ
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2020 12:05
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் 33 சதவீதம் பேருடன் பணியாற்ற இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அனைத்து கோயில்களும் ‛அ மற்றும் ‛ஆ பிரிவு அலுவலர்கள் 33 சதவீதம் பேருடன் பணியாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாள்ற வேண்டும். அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் தினமும் அலுவலகத்திற்கு வர வேண்டும். பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ள பணியாளர்கள் பணி செய்ய அனுமதிக்க கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர பக்தர்கள் உள்பட வேறு யாருக்கும் அனுமதியில்லை. கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றைவையும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.