பதிவு செய்த நாள்
07
மே
2020
11:05
பேரூர்: கோவை ஈஷா யோக மையம் சார்பில், மருத்துவ பணியாளர், போலீசாருக்கு ஆன்லைன் வாயிலாக, யோகா வகுப்பு இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர், போலீசார் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களுக்கு ஆன்லைன் வாயிலாக, யோகா வகுப்பை இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட உள்ளதாக, சத்குரு அறிவித்துள்ளார். அந்த வகுப்பு, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கற்றுக்கொடுக்கப்படவுள்ளது. பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பிரத்யேக லாகின் விபரங்கள் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி, அவர்கள் மொபைல் போன் அல்லது கணினியில், ஏழு வீடியோக்களை பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும், 60 முதல், 90 நிமிடங்கள் இருக்கும். அதில், எளிமையான முறையில், சக்திவாய்ந்த வழிகாட்டு தியானங்கள் இடம் பெற்று இருக்கும். நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகு, வகுப்பை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு, ஷாம்பவி மஹாமுத்ரா என்ற தொன்மையான, சக்திவாய்ந்த க்ரியாவுக்கு நேரில் தீட்சை வழங்கப்படும். ஆன்லைன் ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்க, tamil.sadhguru.org/IYO என்ற இணைதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.