பதிவு செய்த நாள்
08
மே
2020
10:05
வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில் உள்ள வள்ளி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரையில் வரும் பவுர்ணமி மிகவும் பிரசித்திபெற்றது. ஊரடங்கு காரணமாக, பெரும்பாலான கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளது. இன்னிலையில், சித்ரா பவுர்ணமி தினமான நேற்று, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடந்தது. ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி அன்று பக்தர்கள் குவிந்து காணப்படும் மருதமலை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மருதமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி, வள்ளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து, வள்ளியம்மன், வெள்ளி காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று வள்ளியம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.