வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கோரி வழக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2020 12:05
சென்னை : வழிபாட்டு தலங்களை திறந்து பக்தர்களை அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஜலீல் என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் பல நிறுவனங்கள் கடைகள் மது கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.முதல் கட்டமாக மூடப்பட்ட கோவில்கள் பின் பூஜை நடக்க சுத்தம் செய்ய மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் பக்தர்களை அனுமதிக்கவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எது நடந்ததோ எல்லாமே கடவுளின் செயல்.கோவில் மசூதி தேவாலயம் ஆகிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபடும்போது மன வலிமை கிடைக்கிறது.
தற்போது வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே கோவில் மசூதி தேவாலயங்களை திறந்து தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும்; எந்த வைரஸ் கிருமியும் பாதிக்காது. வரிசையாக அனுப்பி தரிசிக்க வைக்கலாம். எனவே வழிபாட்டு தலங்களை திறந்து தரிசனம் செய்ய பிரார்த்தனை செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.