பலர் தாம் ஏழையாக இருக்கிறோமே என வருந்துகி றார்கள். செல்வந்தர்களைக் கண்டு ஏங்குகிறார்கள். இது தேவையற்றது. இறைவன் முன்னிலையில் ஏழைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. வறுமை என்பது இறைவன் தரும் பரிசு. தன் மீது விசுவாசம் கொண்டவனுக்கு இறைவன் வறுமையை தருகிறான். வறுமை இழிவானது அல்ல. ஒருவனின் மறைவுக்குப் பின் அவன் இறைவன் முன்னிலையில் வறுமைக் கோலத்தில் நின்றால் அதை அலங்காரமாக ஏற்று ரசிக்கிறான் என்கிறார் நாயகம்.
அதே நேரம், வறுமை ஏற்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா? எந்த குடும்பத்தில் குழந்தைகள் காரணம் இன்றி கடுமையாகத் திட்டப்படுகிறார்களோ அங்கு வறுமை வரும். அளவுக்கதிகமான ஆடம்பரமாகவும், பெருமைக்காகவும் ஆடை, ஆபரணம் அணிந்தாலும் வறுமை உண்டாகும். வீட்டில் சிலந்திப் பூச்சிகளைக் கண்டால் ஒட்டடையை அகற்றி சுத்தம் செய்யுங்கள். இல்லாவிட்டால் வாழ்வில் வறுமையைக் கொண்டு வரலாம்.
இப்தார்: மாலை 6:38 மணி நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:19 மணி