கோவில்பட்டி காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2012 11:05
கோவில்பட்டி : கோவில்பட்டி காளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. கோவில்பட்டி கதிரேசன் கோயில் ரோடு மற்றும் ஏகேஎஸ் தியேட்டர் ரோடு மேட்டுத்தெரு சந்திப்பிலுள்ள காளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் அன்னதானம் நடந்தது. முன்னதாக சித்திரை பொங்கலை முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில்பட்டி கதிரேசன் கோயில் ரோடு கம்மவார் சங்க திருமண மண்டபத்தில் நடந்த அன்னதானத்திற்கு அதிமுக சட்டசபை தொகுதி செயலாளர் மாணிக்கராஜா கலந்து கொண்டு தலைமை வகித்து அன்னதானத்தை துவக்கி வைத்தார். கோவில்பட்டி டாக்டர் பிரபு முன்னிலை வகித்தார். இதையடுத்து அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் சட்சபை தொகுதி இணைச்செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் வெள்ளைச்சாமி, அமைப்புசாரா ஒன்றிய துணை செயலாளர் செண்பகமூர்த்தி, நகர மாணவரணி செயலாளர் பாபு, முன்னாள் கவுன்சிலர் அங்குச்சாமி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் விஜயமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.