டூவிபுரம் யாக்கோபு ஆலயத்தில் ஜெபக்கோபுர திறப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2012 11:05
தூத்துக்குடி : தூத்துக்குடி டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயத்தில் ஜெபக்கோபுர திறப்பு விழா நடந்தது. ஜெபக்கோபுரத்தை பிஷப் ஜெபச்சந்திரன் திறந்து வைத்தார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார். ஜெபக்கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு ஆனந்த ஸ்திராவின் தேவசெய்தி நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேகரத்தலைவர் ஜேசன் செல்வக்குமார், சேகர செயலாளர் ஜெயசிங் செல்வக்குமார், சேகர பொருளாளர் ஜான்சன் ராஜாசிங், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் இம்மானுவேல், பாக்கியசீலன், பாபு பிரபாகர், சிம்சோன், ராஜா ராபர்ட் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.